Monday, September 1, 2014

2014 ஜூலை மாதஉலக நிகழ்வுகள்

2014 ஜூலை மாதஉலக நிகழ்வுகள்

*.  ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் செயற்கைக் கோள்கள் செயற்கைக் கோள்களைக் கொண்ட இந்தியாவின் பி.எஸ்.எஸ்.வி சி23 ரொக்கட் விண்ணிற்கு ஏவப்பட்டது

*.  பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவராக அமித்ஷா தெரிவு செய்யப்பட்டார்.

*.  20 ஆவது பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஆரம்பித்தது. பொதுநலவாய சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் 71 நாடுகளைச் சேர்ந்த 6500 போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.17 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன.

*. இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற தென்னாபிரிக்க எழுத்தாளர் நடினி கோர்டிமெர் தனது 90 வயதில் மரணமடைந்தார்.

*. பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கும் பிரிக்ஸ் மாநாடு பிரேஸிலின் போர்ட்டலெஸா நகரில் நடைபெற்றது. 100 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் புதிய அபிவிருத்தி வங்கி , 100 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அவசர கால ஒதுக்கீட்டு நிதியம் ஆகியன அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் ஐந்து நாடுகளும் கைச்சாத்திட்டன.

*. ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் கறுப்பினப் பெண்மணி ஆலிஸ் கோச் மேன் டேவிஸ் 90 வயதில் மரணமடைந்தார். 1948 இல் நடைபெற்ற ஒலிம்பிக்கில் உயரம் பாய்தலில் இவர் தங்கம் வென்றிருந்தார்.

*. 298 பேருடன் நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசியாவின் கோலாம்பூர் பயணித்த MH 17 விமானம் உக்ரேன் வான் பரப்பில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டது. 

*. உக்ரேன் பிரதமர் அர்ஸெனி யட்ஸெனியக் பதவி விலகினார்.

*. இஸ்ரேல் ஹமாஸ் மோதலின் தொடர்ச்சியாக இஸ்ரேல் காசா மீது ஆரம்பத்தில் வான் தாக்குதல்களையும் பின்னர் தரைவழித் தாக்குதல்களையும் மேற்கொண்டது.ஹமாஸின் இலக்குகளே இலக்கு வைக்கபட்டதாக இஸ்ரேல் கூறினாலும் அதிகளவிலான பொதுமக்களே இத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டனர். அத்தோடு வீடுகள், மருத்துவமனைகள், ஐ.நா பாடசாலைகள் என்பனவும் பாதிப்படைந்தன. பதிலடியாக ஹமாஸ் இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்ட போதிலும் இஸ்ரேலின் பாதுகாப்பு முறைமையான அயன் டோமின் காரணமாக அவை பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை.

*. எபோலா வைரஸின் தாக்கம் லைபீரியா, சியர்ரா லியோன், நைஜீரியா போன்ற நாடுகளில் தீவிரமடைந்தது.

*. விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் கிண்ணத்தை சேர்பியாவின் நோவாக் ஜேகோவிச் 2 ஆவது தடவையாகக் கைப்பற்றினார். விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் கிண்ணத்தை செக் குடியரசைச் சேர்ந்த பெட்ரா கிவிட்டோவா 2 ஆவது முறையாகக் கைப்பற்றிக் கொண்டார்.

*.  பிரேஸிலின் மரகானா மைதானத்தில் நடைபெற்ற 20 ஆவது உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் 1-0 அடிப்படையில் ஆர்ஜன்டீனாவை வெற்றி கொண்ட ஜேர்மனி கிண்ணத்தைக் கைப்பற்றியது.

குழுநிலைப் போட்டிகளில் ஜேர்மனி குழு G இல் விளையாடியிருந்தது.

ரவுண்ட் 16இல் அல்ஜீரியாவை 2-1 இல் வீழ்த்திய ஜேர்மனி காலிறுதிக்குள் நுழைந்தது.

காலிறுதியில் பிரான்ஸை 1-0 அடிப்படையில் வீழ்த்திய ஜேர்மனி அரையிறுதிக்கு முன்னேறியது.

அரையிறுதியில் பிரேஸிலை 7-1 அடிப்படையில் வீழ்த்தி ஜேர்மனி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 

இறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீனாவை 1-0 அடிப்படையில் வென்று 20 உலகக் கிண்ண சம்பியனானது. 

இறுதிப் போட்டியில் எந்தவொரு அணியும் கோல் போடவில்லை. பின்னர் வழங்கப்பட்ட மேலதித நேரத்தின் 113 ஆவது நிமிடத்தில் ஜேர்மனியின் மரியா கோட்ஷே அடித்த கோல் ஜேர்மனியின் வெற்றியை உறுதிப்படுத்தியது.

1986,1990 ஆகிய வருடங்களின் உலக உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டிகளிலும் ஏற்கனவே ஜேர்மனி, ஆர்ஜண்டீனா ஆகிய இரு அணிகளும் மோதியுள்ளன.

ஜேர்மனியின் தலைவர் -பிலிப் லாம் 
    பயிற்சியாளர் - ஜோகிம் லூ
    கோல் காப்பாளர் மெனுவல் நெயுயர்

போட்டியை நடத்திய நாடான பிரேஸில் மூன்றாம் இடத்தைப் பெற்றது. பிரேஸிலில் உலகக் கிண்ண உதைப்பந்தாட்டம் நிகழ்வது 2 ஆவது முறையாகும். ஏற்கனவே 1950 இல் பிரேஸில் உலக உதைப்பந்தாட்டத்தை நடத்தியிருந்தது. 

விருதுகள்:கோல்டன் பூட் :ஜேம்ஸ் ரொட்ரிகோஸ் (கொலம்பியா)(6 கோல்)
கோல்டன் போல் : லயனல் மெஸ்ஸி
சிறந்த அணி : கொலம்பியா
சிறந்த இளம் வீரர் : போல் போக்பா ( பிரான்ஸ்)
சிறந்த கோல் காப்பாளர் : மெனுவல் நெயுயர் ( ஜேர்மனி)

2014 உலகக் கிண்ண உதைப் பந்தாட்டத்தில் மொத்தமாக 171 கோல்கள்  அடிக்கப்பட்டன.

2018 இல் உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெறும். 

*. உதைப்பந்தாட்ட நடப்புச் சம்பியன் ஜேர்மனியின் தலைவர் பிலிப் லாம் சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார்.

*. பிரேஸிலின் பயிற்றுவிப்பாளர் லீயுஸ் பெலிப் ஸ்கோலரி பதவி விலகினார்.

இலங்கை நிகழ்வுகள்..

*. சிறியளவிலான சமூக அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவுஸ்திரேலியா  27 மில்லியன் உதவியை வழங்கியது. 

*. இலங்கையின் 19 ஆவது கடற்படைத்தளபதியாக வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா பதவியேற்றார்.

*. ஆசிய கிரிக்கட் கவுன்ஸிலின் தலைவராக இலங்கைக் கிறிக்கட்டின் தலைவர் ஜயந்த தர்மதாஸ தெரிவுசெய்யப்பட்டார்.

*. தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான விசேட பிரதிநிதியான சிறில் ராமபோஷ இலங்கை விஜயம் செய்தார்.

*. ரத்னதீப, மிஹிகந்த என்ற பெயரிலான இரண்டு கண்காணிப்புக் கப்பல்களை அவுஸ்திரேலியா இலங்கைக்கு வழங்கியது. 

*. 5 பில்லியன் முதலீட்டில் கார்கில்ஸ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

*. பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 13 வகையான போட்டிகளில் இலங்கை வீரர்கள் 99 பேர் பங்கு பற்றுகின்றனர்.மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் 5 பேர் பங்கு பற்றுகின்றனர். 
இலங்கை விளையாட்டு வீரர்களின் தலைவர் கே. அன்டன் சுதேஸ் பீரிஸ்.
ஆடவருக்கான 72 Kg எடைப்பிரிவில் பளுதூக்குதலில் பங்கு பற்றிய சுதேஸ் பீரிஸ் 273Kg எடையைத் தூக்கி இலங்கைக்கு வெள்ளிப்பதக்கத்தை பெற்றுத் தந்தார்.

*. இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளநராக பி. சமரசிறி நியமிக்கப்பட்டார்.

*. குருநாகல் மாவட்டத்தின் எஹெப்டுவௌ பிரதேச செயலகப் பிரிவில் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்தும் முகமாக 155KM நீளமான மின்சார வேலிகள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.
www.facebook.com/ulahavalam
ulahavalam.blogspot.com


Monday, August 4, 2014

2014 ஜூன் மாத உலக நிகழ்வுகள்

ஜூன் மாத உலக நிகழ்வுகள்

 • இந்தியாவின் 29 ஆவது மாநிலமான தெலுங்கானா உதயமானது. ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா உருவாக்கப்படுவதற்கு ஜூலை 2013இல் காங்கிரஸ் கூட்டணி முடிவு செய்தது. கடந்த பெப்ரவரியில் தெலுங்கானா தனிமாநில மசோதா பாராளுவமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி முகர்ஜியின் ஆதரவும் பெறப்பட்டிருந்தது. லோக்சபா தேர்தலின் போது மாநில சட்ட சபைக்கும் தேர்தல் நடைபெற்றது. முதலமைச்சராக சந்திரசேகர ராவ் தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையிலேயே தெலுங்கானா உதயமாகியது.
 • எகிப்தில் கடந்த மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத்தளபதி அப்துல்லா அல் சிசிவெற்றி பெற்றார். கடந்த வருடம் ஜூலையில் அந்நாட்டின் முன்னாள் அதிபர் முஹம்மட் முர்ஸிக்கெதிரான போராட்டத்தைத் தொடர்ந்து இராணுவத்தளபதியான அல் சிசி முர்ஸியைப் பதவியிறக்கம் செய்தார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தன்னுடைய இராணுவத்தளபதி பதவியை இராஜிநாமா செய்த அல்சிசி 96.9% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
 • சிரியா ஜனாதிபதியாக பஷர் அல் அஸாத் பதவியேற்றார்.
 • உக்ரேன் ஜனாதிபதியாக பெட்ரோ போரோ ஷென்கோ பதவியேற்றார். தேர்தல் கடந்த மேயில் நடைபெற்றது.
 • இஸ்ரேலின் ஜனாதிபதியாக  ரியுவின் ரிவ்லின் பாராளுவமன்றத்தால் தெரிவு செய்யப்பட்டார்.
 • G77 மாநாடு பொலிவியாவில் நடைபெற்றது. 
 • ஐநா மனித உரிமை ஆணையாளராக ஜோர்தான் இளவரசர் Zeid Al Hussein தெரிவு செய்யப்பட்டார். இவர் செப்டம்பரில் பதவியேற்கவுள்ளார்.
 • சல்மான் ருஷ்டிக்கு பென் பின்டர் விருது வழங்கப்பட்டது. இலக்கிய பங்களிப்பு, கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தமை போன்றவற்றுக்காக இவ்விருது வழங்கப்பட்டது. 
 • குண்டு துளைக்காத கவசங்களில் பயன்படுத்தப்படும் கவ்லர் என்ற நார்ப்பொருளை உருவாக்கிய ஸ்ரீபன் க்வொலக் தனது 90 வயதில் மரணமடைந்தார்.
 • இஸ்ரேலின் மூன்று இளைஞர்கள் காணமல் போனதையடுத்து இஸ்ரேல் பாரிய தேடுதல் நடவடிக்கையை மேற்குக் கரையில் ஆரம்பித்தது. இந்த தேடுதல் நடவடிக்கையின் போது மேற்குக் கரையின் ஹமாஸ் தலைவர்கள் உட்படகிட்டத்தட்ட 350 பலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டதோடு, 5 பலஸ்தீனியர்களும் உயிரிழந்தனர். இறுதியில் மூன்று இளைஞர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. ஹமாஸ் இயக்கமே இந்தக் கடத்தலைச் செய்ததாக இஸ்ரேலின் பிரதமர் பெஞசமின் நெதன்யாகு குற்றம் சாட்டினார்.
 • ஈராக்கின் மௌசூல், பலூஜா மற்றும் திக்ரிட் ஆகிய நகரங்களைக் கைப்பற்றிய ISIS போராட்டக்குழு ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை இணைத்து இஸ்லாமிய அரசு என்ற பெயரில் ஆட்சியை ஆரம்பித்ததோடு அதன் கலீபாவாக அபூபக்கர் அல் பக்தாதி என்பவரையும் நியமித்தது.
 • 7 ஆவது IPL இன் இறுதியாட்டத்தில்கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி  சம்பியனாகியது.   கிங்ஸிலெவன் பஞ்சாப் அணியை 3 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டே கொல்கத்தா நைட்ரைடர்ஸ் சம்பியனாகியது.
 • 20ஆவது உலக உதைப்பந்து போட்டிகள் பிரேசிலில் ஆரம்பமாகியது.64 போட்டிகள் நடைபெறுகின்றன. 32 அணிகள் 8 பிரிவுகளாக விளையாடுகின்றன.ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் பங்குபற்றுகின்றன. போட்டிகளில் பிரசுகா எனும் உதைப்பந்து பயன்படுத்தப்படுகிறது. Free kick களில் Vanishing foam  பயன்படுத்தப்படுகிறது.பந்து கோல் எல்லைக் கோட்டைத் தாண்டியதா என அறிய உதவும் கோல் லைன் தொழில்நுட்பம் (Goal Line Technology)பயன்படுத்தப்படுகிறது. உலக உதைப்பந்துப் போட்டிகளில் கோல் லைன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. பிரான்ஸ் கொண்டூரஸ் அணிகளின் போட்டிகளின் போது இது பயன்படுத்தப்பட்டது. 
 • பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஸ்பெய்ன் ரபேல் நடால் சம்பியன் கிண்ணத்தை வென்றார்.மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா சம்பியன் கிண்ணத்தை வென்றார்.

 • சமாதானம் ஐக்கியத்திற்கான பொலிவியாவின் உயர் விருதான புளோரிநெஷனல் விருது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொலிவிய ஜனாதிபதி ஈவோ மொரல்ஸினால் வழங்கப்பட்டது. 
facebook.com/ulahavalam
ulahavalam.blogspot.com

Wednesday, June 11, 2014

2014 மே மாத உலக நிகழ்வுகள்

2014 மே மாத உலக நிகழ்வுகள்
 • இந்தியாவின் 15ஆவது பிரதமராக பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த நரேந்திர மோடி தெரிவு செய்யப்பட்டார்.
 • jha;yhe;jpy; gpujku; apq;Yj; rpdtj;uhTf;F vjpuhf Mu;g;ghl;lq;fs; Nkw;nfhs;sg;gl;L te;j epiyapy;> mjpfhuj;ijj; jtwhfg; gad;gLj;jpaik njhlu;ghd Fw;wr;rhl;by; apq;Yj; rpdtj;uhit gjtp tpyFkhW ePjpkd;wk; jPu;g;gspj;jijaLj;J mtu; gjtp tpyfpdhu;. ,jidaLj;J mtuJ fl;rpiar; Nru;e;j Nghd;rhq; vd;gtu; gpujkuhf mwptpf;fg;gl;lhu;. Mu;g;ghl;lq;fs; njhlu;e;Jk; Kd;ndLf;fg;gl;l epiyapy; Nkw;nfhs;sg;gl;l rkur eltbf;iffs; Njhy;tpaile;jijaLj;J ,uhZt rl;lj;ij mKy;gLj;jpa ,uhZtk; Ml;rpiaf; ifg;gw;wpaJ.
 • gdhkh [dhjpgjpj; Nju;jypy; Jiz [dhjpgjp [_ad; fhu;Nyh]; tuNyh ntw;wp ngw;whu;.
 • Kd;dhs; ,e;jpaf; Fbaurpd; jiytu; mg;Jy; fyhKf;F ];nfhl;yhe;J Vld;gu;f; gy;fiyf;fofk; nfsut lhf;lu; gl;lk; toq;fp nfsutpj;jJ.
 • Mrpahtpd; ,ilaPl;Lr; nraw;ghL kw;Wk; ek;gpf;ifiaf; fl;bnaOg;Gtjw;fhd mikg;gpd; (Conference on Interaction and Confidence Building Measures in Asia – CICA)khehL rPdhtpd; rq;fha; vf;];Ngh epiyaj;jpy; eilngw;wJ.
 • Kd;dhs; Nghg;ghz;ltu;fshd ,uz;lhk; N[hd;Nghy; > 23k; N[hd; MfpNahiu ghg;guru; gpuhd;rp]; Gdpju;fshf mwptpj;jhu;.
 • njd;dhgpupf;f nghJj; Nju;jypy; [dhjpgjp [Nfhg; RNkh jiyikapyhd MSk; Mgpupf;f Njrpa fhq;fpu]; fl;rp ntw;wp ngw;wJ.
 • kl;upl; gfpuq;f nld;dp]; Nghl;bapy; ungy; elhy; > kupah \uNghth MfpNahu; rk;gpad; gl;lj;ijg; ngw;Wf; nfhz;ldu;.
 • அமெரிக்க ஓட்டப்பந்தய வீரர் டைசன் கேயின் ஒலிம்பிக் பதக்கம் ஊக்கமருந்து குற்றச் சாட்டின் காரணமாக பறிமுதல் செய்யப்பட்டது.

 • mnkupf;f vOj;jhsUk; ftpQUkhd khah mQ;rY fhykhdhu;.
 ,yq;if epfo;Tfs;.
 • cyf ,isQu; khehL `k;ghe;Njhl;ilapy; Muk;gkhdJ. 2015Mk; Mz;bd; gpd;duhd mgptpUj;jp epfo;r;rp epuypy; ,isQu;fis gpujhdg;gLj;jy; vDk; njhdpg; nghUspy; ,J eilngw;wJ. உலக இளைஞர் மாநாடு முதன் முறையாக 1936 ,y; eilngw;wJ. ,Wjpahf fle;j 2010Mk; Mz;L nkf;]pNfhtpy; eilngw;wJ. 
 • murhq;fj;jpw;nfjpuhd ek;gpf;ifapy;yhg; gpNuuiz 94 Nkyjpf thf;Ffshy; ntw;wp ngw;wJ. ,g;gpNuuizf;F Mjuthf 57 thf;FfSk; vjpuhf 151 thf;FfSk; fpilj;jd.

Wednesday, April 30, 2014

2014 ஏப்ரல் மாத உலக நிகழ்வுகள்

2014 ஏப்ரல் மாத உலக நிகழ்வுகள்

 • நைஜீரியாவில் போஹோ ஹராம் என்ற அமைப்பு 200இற்கு மேற்பட்ட மாணவிகளைக் கடத்தியது.
 • தென்கொரியாவிலிருந்து Jeju தீவுக்கு 400க்கு மேற்பட்டோருடன் பயணித்த தென்கொரியக் கப்பல் கடலில் மூழ்கியது.
 • மியாமி பகிரங்க டென்னிஸ் போட்டியில் நோவாக் ஜோகோவிச் சம்பியனானார்.


இலங்கை நிகழ்வுகள்

 • ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பஹ்ரைனுக்கு விஜயம் மேற்கொண்டார். இவ்விஜயத்தின் போது ஜனாதிபதியவர்களுக்கு பஹ்ரைன் மன்னர் ஹமட் பின் இஸ்ஸா அல் கலீபா வினால் ‘கலீபா’ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
 • மேல் மற்றும் தென் மாகாண முதலமைச்சர்களாக முறையே பிரசன்ன ரணதுங்க, ஷான் விஜய லால் டி சில்வா ஆகியோர்  பதவியேற்றனர். இம்மாகாணங்களுக்கான தேர்தல் கடந்த மார்ச்சில் நடைபெற்றது.
 • சமய செயற்பாடுகள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்க விசேட பொலிஸ் குழு ஆரம்பிக்கப்பட்டது.
 • இலங்கை உரக்கம்பனி தனது பொன்விழாவைக் கொண்டாடியது.
 • உலக சமாதான அமைப்பின் இலங்கைத் தூதுவராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமில் நியமிக்கப்பட்டார்.
 • பங்களாதேஷின் ஸ்ரீ பங்களா தேசிய அரங்கில் (Sher e Bangla National Stadium ) நடைபெற்ற 5 ஆவது T20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியாவை 6 விக்கெட்டுக்ளால் வீழ்த்திய லசித் மலிங்க தலைமையிலான இலங்கை அணி சம்பியனாகியது. இப்போட்டியில் இலங்கை 134 ஓட்டங்களைப் பெற்றது.
 • இலங்கை T20 அணியின் தலைவராக லசித் மலிங்கவும், உபதலைவராக லஹிரு திருமான்னேவும் நியமிக்கப்பட்டனர். இலங்கை ஒருநாள் அணியின் தலைவராகவும் லஹிரு திருமான்னே நியமிக்கப்பட்டார்.
 • T20 போட்டிகளிலிருந்து குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன ஆகியோர் ஓய்வு பெற்றனர்.
 • இலங்கை கிரிக்கட் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராக மாவன் அத்தபத்து நியமிக்கப்பட்டார். 
 • முதலாவது தெற்காசிய கூடைப்பந்தாட்ட சம்பியன் போட்டியில் பங்களாதேஷ் சம்பியனாகியது. இலங்கைக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 
 • சிறிலங்கா எயர்லைன்ஸ் OneWorld குழுமத்துடன் இணைந்தது. Sunday, March 9, 2014

2014 மார்ச் மாத உலக நிகழ்வுகள்


உலக நிகழ்வுகள்
 • உக்ரைனிலிருந்து பிரிவதற்காக மக்களின் சம்மதத்தினை அறிவதற்கான பொது வாக்கெடுப்பு கிரிமியா நாடாளுவமன்றத்தினால் நடத்தப்பட்டது. இதற்கு ஆதரவாக 97% வாக்குகள் கிடைத்தன. இதன் பின்னர் கிரிமியா உக்ரைனிலிருந்து பிரிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதோடு ரஷ்யாவுடன் இணைந்து கொள்வதற்காகவும் விண்ணப்பிக்கப்பட்டது. பின்னர் ரஷ்யா கிரிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதனால் ஜி 8 நாடுகளிலிருந்து ரஷ்யா நீக்கப்பட்டது.
 • மலேசியாவிலிருந்து சீனா நோக்கிப் பயணமான  370 என்ற விமானம் காணாமல் போனது. அதனைத் தேடும் நடவடிக்கையில் பல நாடுகளின் கப்பல்கள், விமானங்கள் ஈடுபட்ட போதிலும் இதுவரை அது கண்டுபிடிக்கப்படவில்லை.
 • ஆசியக் கோப்பை கிரிக்கட் போட்டியில் இலங்கை சம்பியனாகியது.
 • 'பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான வங்களா விரிகுடாவின் வாயில்' எனப்படும் பிம்ஸ்டெக் அமைப்பின் மூன்றாவது அரச தலைவர்கள் மாநாடு மியன்மாரின்  Nay Pyi Taw நகரில் நடைபெற்றது.
 • 86 ஆவது ஒஸ்கார் விருது விழா லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இடம் பெற்றது. 
  • சிறந்த திரைப்படம் :12 Years a slave 
  • சிறந்த இயக்குனர் : Alfonso Cuaron
  • சிறந்த நடிகர் :Matthew McConaughey
  • சிறந்த நடிகை : Catt Blanchett


இலங்கை நிகழ்வுகள்
 • ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்தார்.
 • பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மியன்மார் சென்றார்.
 • தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் ஆங்கிலம் கற்பிக்கும் முறை ' ஆங்கிலம் பேசும் பாடசாலை' எனும் நிகழ்ச்சித்திட்டத்திற்கூடாக ஆரம்பிக்கப்பட்டது.
 • கிளிநொச்சி தொடக்கம் பளை வரையான ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
 • மேல்மாகாணம், தென்மாகாணம் ஆகியவற்றிற்கான மாகாண சபைத்தேர்தல் நடைபெற்றது.

Tuesday, February 18, 2014

2014 பெப்ரவரி மாத உலக நிகழ்வுகள்


 • சச்சின் டெண்டுல்கார் மற்றும் இந்திய விஞ்ஞானி சி. என். ஆர். ராவ் ஆகியோருக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்டது.
 • இந்திய திரைப்பட இயக்குனர் பாலுமகேந்திரா சென்னையில் காலமானார்.
 • உக்ரைனில் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அரசுத்தலைவர் யானுக்கோவிச் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
 • WhatsApp ஐ Facebook வாங்கியது.
 • நேபாளத்தின் புதிய பிரதமராக நேபாளி காங்கிரஸ் கட்சியின் சுஷில் குமார் கொய்ராலா தெரிவு செய்யப்பட்டார்.
 • மைக்ரோசொப்டின் புதிய தலைவராக இந்தியரான நாதெல்லா சத்யா நியமிக்கப்பட்டார்.
 • 2014ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டி ரஷ்யாவின் சோச்சி நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கை
 • தேசத்திற்கு மகுடம் கண்காட்சி குளியாப்பிட்டியவில் நடைபெற்றது.
 • விமானப்படையின் 14 ஆவது தளபதியாக எயா மார்ஷல் கோலித குணதிலக நியமிக்கப்பட்டார்.

January 2014